காங். பஞ். தலைவருக்கு எதிராக திமுகbr/நம்பிக்கை இல்லா தீர்மானம்
உடன்குடி:
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உடன்குடி பேரூராட்சித் தலைவர் மீது திமுகவினரே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இதனால் அங்கு திமுக, காங்கிரஸ் இடையே மோதல் வெடித்துள்ளது.
உடன்குடி டவுண் பஞ்சாயத்துத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாகுல் அமீது இருக்கிறார். இந்தப் பேரூராட்சியில் 18 கவுன்சிலர்கள் உள்ளனர்.
இதில் திமுகவைச் சேர்ந்த துணை தலைவர் ஜான் பாஸ்கர் தலைமையில், தலைவர் சாகுல் அமீது மேல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி 15 கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து நெல்லை மண்டல டவுண் பஞ். உதவி இயக்குநர் லிங்கேசனை சந்தித்து மனு அளித்தனர்.
திமுக தவிர மதிமுக, அதிமுக ஆகிய அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான மனுவை அளித்துள்ளனர்.
தங்கள் கட்சியைச் சேர்ந்த பேரூராட்சித் தலைவர் மீது திமுக கவுன்சிலர்கள் மனு கொடுத்தது காங்கிரஸ் கட்சியினரை கொதிப்புக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications