மணல் திருட்டுக்கு உதவிய விஏஓ சஸ்பெண்ட்
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் மணல் திருட்டுக்கு உதவிய கிராம நிர்வாக அதிகாரி உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சேரன்மகாதேவி பகுதியில் திருட்டுத் தனமாக மணல் அள்ளுவதாக அப்பகுதி சப்-கலெக்டருக்கு புகார் வந்தது. இதனால் அப்பகுதியில் கடந்த 4ம் தேதி சப்-கலெக்டர் பாலாஜி தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அனுமதி (லைசென்ஸ்) காலம் முடிந்த பிறகும் போலி ரசீது முலம் திருட்டுத்தனமாக கடந்த 5 மாதங்களாக செயல்பட்ட மணல் குவாரிகளை சப்-கலெக்டர் பாலாஜி கண்டுபிடித்தார். அங்கு 594 யூனிட் மணல் திருட்டுதனமாக அள்ளியது தெரியவந்தது.
இதுகுறித்து நடந்த சோதனையில் 6 லாரிகள், ஒரு டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் விஏஓ ஆதி நாராயணன், தலையாரிகள் முருகன், பொன்னையன் ஆகிய மூவரும் மணல் திருட்டு குறித்து உரிய தகவல் கொடுக்காதது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் சப்-கலெக்டர் பாலாஜி சஸ்பெண்ட் செய்தார்.












Click it and Unblock the Notifications