விளையாட்டு பயிற்சி மையம் மாற்றம்;br/பொன்.ராதா சாகும் வரை உண்ணாவிரதம்!
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கல்மங்கலத்தில் அமையவிருந்த இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தை (சாய் சாஃப்) நெல்லைக்கு மாற்றுவதை எதிர்த்து அங்கு பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
ராஜாக்கல்மங்கலத்தில் இருந்து சாய் சாஃப் சென்டரை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கூடாது என கோரி பா.ஜ.க, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதன் உச்சகட்டமாக முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மாநில துணை தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
போராட்டத்தை மாநில தலைவர் இல.கணேசன் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், ராஜாக்கல் மங்கலத்தில் விளையாட்டு மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் முடிவு செய்துள்ளார்.
சாகும் வரை உண்ணாவிரதம் என்று கூறினால் அது கோரிக்கை நிறைவேறாது என்ற நம்பிக்கையால் உண்ணாவிரதம் இருப்பது என்று அர்த்தமாகி விடும். கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் என்று அவர் அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதை அரசியலாக்க வேண்டாம் என அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறியுள்ளார். இதில் அரசியலுக்கு இடமில்லை.
இதற்காக முதல்வர் அலுவலகத்தில் நாளை (11-09-2007) முதல்வரை சந்திக்க தேதி வாங்கப்பட்டுள்ளது. அப்போது சுரேஷ் ராஜனும் அங்கு வரட்டும். முதல்வர் முன்னிலையில் இதற்கு தீர்வு காணலாம் என்றார் அவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications