3 ஆயுதப் படகுகள் மூழ்கடிப்பு:45 விடுதலைப் புலிகள் சுட்டுக் கொலை!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:ஆயுதங்களுடன் வந்து கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் 3 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும், 45 விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Click to Enlarge Click to Enlarg
Click to Enlarge Click to Enlarge

இதுகுறித்து இலங்கை கடற்படை கமாண்டர் வசந்த கரண்ணகோடா கூறுகையில், இலங்கையிலிருந்து 600 கிலோமீட்டர் தென் கிழக்கில் நடந்த இந்த சம்பவத்தில் 45 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். ஆயுதங்களுடன் வந்த 3 படகுகளும் மூழ்கடிக்கப்பட்ன.

இந்தக் கப்பல்களில் எந்தக் கொடிகளும் இல்லை, பெயர்கள் இல்லை, பதிவு எண்களும் இல்லை.

இந்தக் கப்பல்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் சென்றது குறித்து முன்கூட்டியே எங்களுக்குத் தகவல் கிடைத்து விட்டது. அதன் அடிப்படையிலேயே தாக்குதல் நடந்தது.

இந்தப் படகுகளில் 3 இலகு ரக விமானங்கள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் ஆகியவை கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கிறோம்.

ஒவ்வொரு படகிலும் 15 விடுதலைப் புலிகள் இருந்தனர். தாக்குதலில் அனைவரும் இறந்து விட்டனர். மொத்தம் 45 பேர் இறந்திருப்பார்கள் என கருதுகிறோம் என்றார் அவர்.

இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக புலிகள் தரப்பிலிருந்து தகவல் ஏதும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+