வீரபாண்டியாருக்கு எதிரான வழக்கு:br/ஏற்க மதுரை உயர்நீதிமன்றம் மறுப்பு
மதுரை:
சேலம் ரயில் நிலையத்தில், ரயில் மறியல் போராட்டம் நடத்திய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, இந்த வழக்கை சென்னையில் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு அறிவுரை வழங்கியது.
சேலம் ரயில் கோட்டத்தை திட்டமிட்டபடி அமைக்கக் கோரி சமீபத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் சமீபத்தில் சேலத்தில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
அப்போது சிக்னல்கள் உடைக்கப்பட்டன, தண்டவாளத்தில் கற்களும் மண்ணும் கொட்டப்பட்டது, ரயில் என்ஜின் மீதும் கல்வீச்சு நடந்தது.
இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், மதுரை மாவட்ட தேமுதிக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாண்டி வழக்கு தொடர்ந்தார்.
அதில், சேலத்தில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில், தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கலந்து கொண்டார். இது சட்டப்படி தவறு.
போராட்டத்தின் போது ரயில் தண்டவாளம் உள்பட பல பொருட்கள் உடைக்கப்பட்டது. எனவே அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவைப் பரிசீலித்த உயர்நீதிமன்றக் கிளைப் பதிவாளர், இந்த மனுவை இங்கு தாக்கல் செய்ய முடியாது, சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய முடியும் என்று கூறி மனுவை ஏற்க மறுத்து நிராகரித்தார்.












Click it and Unblock the Notifications