பெண் மந்திரவாதி பத்மினிக்கு ஜாமீன்
திருநெல்வேலி:
குடும்பப் பிரச்சினையைத் தீர்ப்பதாக கூறி பல லட்சம் பணத்தை மோசடி செய்து கைதான போலி பெண் மந்திரவாதிக்கு நெல்லை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சியை சேர்ந்தவர் பத்மினி. இவர் பல்வேறு நபர்களிடம் செய்வினை வைப்பது, குடும்ப பிரச்சனைகளை தீர்க்க பரிகாரம் செய்வதாக கூறி பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட பத்மினி, ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, நெல்லை கோர்ட்டில் ஆவணங்களை தாக்கல் செய்து ஜாமீன் பெற அனுமதியளித்தது.
ஆனால் பத்மினி தன்னிடம் சொத்து ஆவணங்கள் இல்லை என்று உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பத்மினியிடம் சொத்துப் பத்திரங்கள் இல்லை என்று நோட்டரி பப்ளிக் உறுதியாணை வழங்கி நெல்லை முதலாவது நீதிமன்றத்தில் காட்டி ஜாமீன் பெறலாம் என அனுமதி அளித்தது.
இதையடுத்து பத்மினிக்கு நிபந்தனையின் அடிப்படையில் நெல்லை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications