பள்ளி உணவில் பல்லி-102 மாணவர்கள் மயக்கம்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 102 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

ஆலங்குடியையடுத்த சுரன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை 3 மணிக்கு சிறப்பு உணவு பறிமாறப்பட்டது. இந்த உணவில் பல்லி விழுந்ததாகத் தெரிகிறது.

இதை உண்ட 102 மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்தனர், சிலர் வாந்தி எடுத்தனர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமிர்தவள்ளி நேரில் வந்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.

பணியில் கவனக் குறைவாக இருந்த சத்துணவு அமைப்பாளர் மஞ்சுளா தேவி, சமையலர் அமராவதி, அவரது உதவியாளர் கனகசுந்தரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+