ரன்வேயில் ஓடிய விமானம் மரத்தில்br/மோதி உடைந்து 88 பேர் பலி!
பாங்காக்:
தாய்லாந்தின் சுற்றுலாத் தளமான புக்கெட் தீவில், விமான நிலைய ரன்வேயில் இறங்கிய விமானம் நிலை தடுமாறு ஓடி மரங்களில் மோதி இரண்டாகப் பிளந்து விபத்துக்குள்ளானது. இதில் 88 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், தாய்லாந்தின் குறைந்த பட்ஜெட் விமான நிறுவனமான ஒன்-டூ-கோ நிறுவனத்திற்குச் சொந்தமான மெக்டோனால்ட்ஸ் டக்ளஸ்-82 ரக விமானம் 123 பயணிகளுடன் பாங்காக் விமான நிலையத்திலிருந்து புக்கெட் தீவுக்குக் கிளம்பியது.
இவர்களில் 78 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், 45 பேர் உள்ளூர்வாசிகள். இவ்ரகள் தவிர ஐந்து விமான ஊழியர்கள், 2 பைலட்டுகளும் விமானத்தில் இருந்தனர்.
விமானம் புக்கெட் வந்ததும், விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், ரன்வே ஈரமாக இருந்தது. ரன்வேயில் விமானம் இறங்கியபோது ஈரத்தன்மை காரணமாக வழுக்கிக் கொண்டு தாறுமாறாக ஓடியது.
வேகமாக ஓடிய விமானம் விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் மரங்களில் மோதி இரண்டாகப் பிளந்தது. பின்னர் விமானம் வெடித்துச் சிதறியது.
இதையடுத்து உடனடியாக தீயணைப்புப் படையினர் தீயணைக்கும் பணியில் இறங்கினர். மீட்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டன. ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு விமான விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் மீட்கப்பட்டனர்.
விபத்தில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் காயமடைந்தனர். 12 பேரைக் காணவில்லை என தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் விமானம் தீயில் எரிந்து கருகி விட்டது. உயிர் தப்பியவர்கள் பலர் விமானத்தின் பின் பகுதியில் உள்ள அவசர காலப் பகுதி வழியாக கீழே குதித்துத் தப்பினர். இதில் கீழே விழுந்த பலருக்கு காயம் ஏற்பட்டது.
கன மழை பெய்து கொண்டிருந்த நிலையில் விமானம் தரையிறங்கியதே இந்த விபத்துக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications