மது குடிக்க பணம் தராத மனைவியை கொன்ற கணவன்
நாமக்கல்:
மது குடிக்க பணம் தராததால் மனைவியை அடித்துக் கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள ஒலப்பாலயத்தில் கூலி வேலை செய்துவருபவர் சண்முகம். இவரது மனைவி தமிழரசி. இவர்கள் இருவரும் கட்டிட கூலி வேலைக்கு செல்கின்றனர்.
சண்முகம் மது அருந்த அடிக்கடி பணம் கேட்டு மனைவியை தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அவர்கள் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுமாம். நேற்று அருவங்காடு பகுதிக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு கூலி வாங்கி வரும் போது சண்முகம், அவரது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.
ஆனால் வழக்கம் போல் அவரது மனைவி மறுத்துள்ளார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகறாறு ஏற்பட்டது. தான் குடிப்பதற்கு பணம் தராத ஆத்திரத்தில் இருந்த சண்முகம், மனைவி தமிழரசியை மட்டைப்பலகையால் தாக்கியுள்ளார்.
அதே இடத்தில் தமிழரசி இறந்து போனார். இதனால் சண்முகம் பயந்து ஓடிவிட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொலை செய்த சண்முகத்தை தேடிவருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications