சென்னை டூ கொழும்புக்கு ரயில்; கொழும்பு டூ தூத்துக்குடிக்கு கப்பல்!
கொழும்பு:
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ரயில் போக்குவரத்தை மேற்கொள்வது தொடர்பான திட்டம் அடுத்த ஆண்டு இறுதி செய்யப்படும் என இலங்கை போக்குவரத்து அமைச்சர் டல்லாஸ் அழகப்பெருமா கூறியுள்ளார்.
இதுகுறித்து டெய்லி நியூஸ் இதழுக்கு அழகப்பெருமா அளித்துள்ள பேட்டியில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் முதலாவது சார்க் நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது. அப்போது இந்தத் திட்டம் குறித்து விவாதித்து இறுதி செய்யப்படும்.
இந்தத் திட்டத்திற்கு அனைத்து சார்க் நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த மாநாட்டின்போது ரயில் போக்குவரத்துத் திட்டம் மற்றும் பயணிகள் கப்பல் திட்டம் குறித்து இறுதி செய்யப்படும்.
இத்திட்டத்தின்படி கொழும்பு - சென்னை இடையே ரயில் பாதை அமைக்கப்படும். அதேபோல கொழும்புக்கும், தூத்துக்குடிக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தும் தொடங்கப்படும்.
பயணிகள் கப்பல் திட்டத்தின் முதல் கட்டமாக கொச்சிக்கும், தலைமன்னாருக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கும். 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பாதையில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. அதன் பின்னர் தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையே பயணிகள் கப்பல் ஓடத் தொடங்கும்.
ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்படும் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications