கோடநாடு எஸ்டேட் இடித்துத் தள்ளப்படும்: ஜெ., சசிக்கு நோட்டீஸ்
ஊட்டி:
கோடநாடு எஸ்டேட்டில் விதிமுறைகளுக்குப் புறம்பாக கட்டப்பட்டவற்றை நீங்களாக இடித்து விடுங்கள். இல்லாவிட்டால் பஞ்சாயத்து சார்பில் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயலலிதா, சசிகலாவுக்கு கோடநாடு பஞ்சாயத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக கடந்த 10ம் தேதி கோடநாடு பஞ்சாயத்து சார்பில், கோடநாடு தேயிலைத் தோட்ட நிர்வாகப் பொறுப்பில் உள்ள ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நோட்டீஸில், கோடநாடு எஸ்டேட்டில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து விட வேண்டும். இல்லாவிட்டால், கோடநாடு பஞ்சாயத்து அந்தக் கட்டடங்களை இடித்துத் தள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸைத் தொடர்ந்தே ஜெயலலிதா கோடநாடு எஸ்டேட்டுக்கு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கோடநாடு பஞ்சாயத்துத் தலைவர் பொன்தோஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ஒரு முக்கிய அரசியல் கட்சியின் தலைவர் (ஜெயலலிதா) தங்கியுள்ள கோடநாடு எஸ்டேட்டில் உள்ள பல கட்டடங்கள் விதிமுறைகளுக்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ளன.
கட்டட விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. இந்தக் கட்டடம் நீலகிரி மாவட்டத்திலேயே மிகப் பெரிய கட்டடமாகும். இதனால் மாவட்ட சுற்றுச்சூழலுக்கே பெரும் பாதிப்பு ஏற்படும்.
கட்டடங்கள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு பலமுறை கோரியும் இதுவரை அவர்கள் தரவில்லை. இதையடுத்தே நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று கூறியுள்ளார்.
தற்போது கோடநாடு எஸ்டேட்டில் தான் ஜெயலலிதா தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் மேலும் ஒருவாரம் கோடநாடு எஸ்டேட்டில் தங்கியிருப்பார் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications