சிறுமியின் மூச்சுக் குழாயில் சிக்கிய பாக்கு!
கோவை:
வீட்டில் விளையாட்டாக பாக்கை எடுத்து வாயில் போட்ட சிறுமி, அந்தப் பாக்கு மூச்சுக் குழாயில் சிக்கியதால் பெரும் அவஸ்தைப்பட்டாள். கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் பாக்கை வெளியில் எடுத்து சிறுமிக்கு புது வாழ்வு கொடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் திருப்பூரைச் சேர்ந்தவர் முகம்மது தலியாஸ். இவரது மகள் சபீனா பர்வீன். 2 வயதாகும் பர்வீன் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு இருந்த பாக்கை எடுத்து வாயில் போட்டு விட்டாள்.
பாக்கு சிறுமியின் மூச்சுக் குழாயில் போய் சிக்கிக் கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவளை கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்தனர். அப்போது மூச்சுக் குழாயில் பாக்கு சிக்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பிரான்கோஸ்கோப்பி மூலம் பாக்கை வெளியில் எடுத்தனர். இதையடுத்து சிறுமியின் நிலை சரியானது.
இதுகுறித்து மருத்துவமனை டீன் டாக்டர் குமரன் கூறுகையில், 10 கிராம் எடை கொண்ட பாக்காக இருந்ததால், அது நேராக மூச்சுக் குழாயில் போய் சிக்கிக் கொண்டது. இடது பக்க நுரையீரலுக்குள்ளும் அது நுழைய ஆரம்பித்திருந்தது. உடனடியாக அதை எடுத்து விட்டதால் சிறுமி உயிர் பிழைத்தாள் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications