வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 3 லட்சம் மோசடி - 3 பேருக்கு வலை!
தூத்துக்குடி:
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக சொல்லி ரூ.3 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பால விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜான். இவர் அனிபா பில்டர்ஸ் என்ற பெயரில் கட்டிட காண்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். இவரது நிறுவனத்தில் தூத்துக்குடி சத்யா நகரைச் சேர்ந்த சங்கர், முனீஸ்வரன் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த ஆண்டு இவர்களுக்கும், கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை புத்தன் வீடு அமரவிளையை சேர்ந்த ததி, செம்மண்விளைவீடு எபநேசர் ராஜா, குளச்சாணி வட்டவிளை செல்வராஜ் ஆகியோருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
ஜான் மற்றும் அவரது ஊழியர்கள் இருவருக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கேரள நபர்கள் கூறினர். இதற்காக ஜானிடம் ரூ.1.25 லட்சமும், மற்ற இருவரிடம் தலா ரூ.1 லட்சமும் வாங்கியுள்ளனர். ஆனால் சொன்னபடி இவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாமல் தட்டி கழித்து வந்தனர்.
இதையடுத்து ஜான் கடந்த 3ம் தேதியன்று தூத்துக்குடி மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. அதன் பேரில் தற்போது வழக்குப் பதிவு செய்து வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications