பெங்களூருக்கு பஸ் போக்குவரத்து சீரானது
ஓசூர்:
பெங்களூரில் பதட்டம் தற்போது தணிந்திருப்பதால், ஓசூர் வழியாக பெங்களூருக்கு தமிழகத்திலிருந்து பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன.
பெங்களூர் பொம்மனஹள்ளி பகுதியில் சென்னைக்கு வந்து கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்தை தடுத்து நிறுத்திய ஒரு கும்பல் பேருந்துக்கு தீவைத்தது. இந்த கொடூர சம்பவத்தில், 2 பேர் உயிரோடு கருகி இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து பெங்களூர் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஓசூரோடு நிறுத்தப்பட்டன. ஓசூர் வரை மட்டுமே தமிழக அரசுப் பேருந்துகள் சென்றன. மேலும் லாரிகளும் பெங்களூருக்குச் செல்லாமல் ஓசூரோடு நின்று விட்டன.
தமிழக பயணிகள் 2 பேர் உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்தது. தமிழர்களின் உடமைகளுக்கும், உயிர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று முதல் போக்குவரத்து சீரடைந்தது. தமிழகத்திற்கு கிளம்பும் அரசுப் பேருந்துகளுக்கு தமிழக எல்லை வரை கர்நாடக போலீஸார் பாதுகாப்பு அளிக்கின்றனர். மேலும் லாரி உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்தும் சீரடைந்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications