'காத்திருப்பு' சிவனாண்டி மீண்டும் டிஐஜியானார்
சென்னை:
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அதிமுக ஆதரவு ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி, ஆயுதப்படை டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது உளவுத்துறை டிஐஜியாக பணிபுரிந்தவர் சிவனாண்டி. தனக்கு மேல் பதவியில் இருந்தவர்களைக் கூட ஓரம் கட்டி விட்டு சகல அதிகாரத்துடன் உலா வந்தார் சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த சிவானண்டி.
கிட்டத்தட்ட அதிமுக 'மாவட்டச் செயலாளர்' போலவே செயல்பட்டு வந்தார். அதிமுகவின் தேர்தல் பணிகளிலும் தீவிர ஆர்வம் காட்டினார். சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்காக இவரும் கூட தீவிரமாக மறைமுக பிரசாரம் செய்தார். ஜெயலலிதாவின் கூட்டங்களுக்கு ஆள் சேர்த்ததாகவும் கூட சர்ச்சைகள் எழுந்தன.
ஒரு கட்டத்தில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலையிலேயே வீடு எடுத்து தங்கும் அளவுக்கு 'தொண்டரானார்'. இவரை விட சீனியர்கள் இருந்தபோதிலும் அவர்களை ஒதுக்கிவிட்டு இவரை உளவுப் பிரிவு ஐஜியாக்கினார் ெஜயலலிதா.
இந் நிலையில் விதிமுறைகளை மீறி அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தீர்ப்பாயத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சிவனாண்டிக்கு பதவி இறக்கம் செய்து ஊர்க்காவல்படை எஸ்பியாக நியமனம் செய்தது. இந் நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவிட சிவனாண்டி உடனடியாக பதவி இறக்கம் செய்யப்பட்டு திருச்சி ஊர்க்காவல் படைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் தன்னுடன் பணியாற்றியவர்கள் எல்லாம் டிஐஜியாக இருப்பதால் இவர் இந்த பணியில் சேராமல் இருந்தார். இதையடுத்து சிவனாண்டி பதவி ஏதும் தரப்படாமல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து தனது பதவி இறக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் சிவனாண்டி. இந்த நிலையில் டிஐஜி பதவியிலிருந்து பதவி இறக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று சிவானண்டிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.
இதைத் தொடர்ந்து சிவனாண்டிக்கு ஆயுதப்படை டிஐஜியாக (சென்னை) பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் மாலதி பிறப்பித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications