நடிகர் விஜயன் மாரடைப்பால் மரணம்
சென்னை:
மூத்த நடிகர் விஜயன் நேற்றிரவு மாரடைப்பால் பலியானார். அவருக்கு வயது 63
கிழக்கே போகும் ரயில் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் விஜயன். அடுத்து வந்த உதிரிப் பூக்கள் படம் மூலம் ரசிகர்களை கொள்ளை கொண்டார்.
வில்லனாக, ஹீரோவாக மிக அட்டகாசமான நடிப்பைத் தந்தவர் விஜயன். தொடர்ந்து ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, பசி, பாலைவன ரோஜாக்கள் உள்பட பல படங்களில் நடித்தார்.
அதன் பின்னர் காணாமல் போனார். குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடினார்.
அவருக்கு ரன் படம் மறுவாழ்வு தந்தது. தொடர்ந்து தமிழ்ப் படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். சமீபத்தில் அஜீத்துடன் வரலாறு படத்திலும் நடித்தார்.
ஆனால், உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தனது சொந்த ஊரான கோழிக்கோடு சென்று விட்டார். விஜயனும் அவரது மனைவியும் 10 வருடங்களுக்கு பிரிந்துவிட்டனர். இவரது மகளுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது.
இந் நிலையில் சுந்தர் சி நடிக்கும் ஆயுதம் செய்வோம் படத்தில் நடிக்க கடந்த வாரம் சென்னை வந்தார்.
இந் நிலையில் நேற்றிரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வாந்தி எடுத்தார். இதையடுத்து வடபழனியில் சூர்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications