வக்கீலுக்கு உதை, குமாஸ்தாவுக்கு வெட்டு

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை:

சிவகங்கையில் பிரபல வக்கீலுக்கு அடி, உதையும், அவருடன் இருந்த குமாஸ்தாவுக்கும், மற்றொரு வக்கீலுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் வசித்து வருகிறார் வக்கீல் சண்முகசுந்தரம். அதே பகுதியில் வசிக்கும் தொழில் அதிபர் சுகர் சேனா என்பவருக்கும், சண்முகசுந்தரத்திற்கும் நீண்டகாலமாக முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் இவர்களுக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. வாய் சண்டையாக ஆரம்பித்து சிறிது நேரத்தில் வெட்டுகுத்தாக மாறியது.

இந்த தகராறில் தனது தந்தையை திட்டியதற்காக ஆத்திரம் அடைந்த சுகர் சேனாவின் அவரது மகன்கள் கமல், சசிகபூர் ஆகியோர் அடியாட்களுடன் சென்று வக்கீல் சண்முகசுந்தரம் அலுவலகத்தை தாக்கி அங்கு இருந்த மற்றொரு வக்கீல் சவுந்தரராஜன், குமாஸ்தா ஆகியோரை அடித்து உதைத்ததோடு அரிவாளால் வெட்டினர்.

இது குறித்து சண்முகசுந்தரம் சிவகங்கை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அவர் கொடுத்த புகாரை வாங்க காவல்துறை மறுத்துவிட்டது.

இதனால் சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கம் ஒன்று திரண்டு பஸ் மறியலில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்யும்வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ள்னர். இதனால் சிவகங்கையில் பரபரப்பு நிலவுகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+