உலகரட்சகன் வீட்டில் கொள்ளை ஏன்?- லட்சுமி பரபரப்பு வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் பாமக எம்எல்ஏ உலகரட்சகனின் குடும்பத்தினர் அங்கு வேலை பார்த்த தனது கணவரை கேவலப்படுத்தியதால் அவர்களைப் பழிவாங்கவும், வசதியாக வாழவும் கொள்ளையை நடத்தியதாக ஹெல்மட் அணிந்து கொள்ளையடித்த லட்சுமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலீசாரிடம் லட்சுமி கொடுத்துள்ள வாக்குமூலம்:

Lakshmi with Saravananஎன் சிறு வயதிலேயே பெற்றோர் விபத்தில் பலியாகிவிட்டதாஸ் அனாதை இல்லத்தில் வளர்ந்தேன். பின்னர் மந்தைவெளியில் வசிக்கும் மதுசூதனன் என்னை தத்தெடுத்தார். பல வருடங்களுக்கு முன் மதுசூதனிடம் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார் சரவணன்.

எனக்கும், சரவணனுக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து எங்களுக்கு மதுசூதனன், கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தார். திருமணத்துக்குப் பின் நாங்கள் அதே பகுதியில் வேறு வீடு பார்த்து தனி குடித்தனம் நடத்தி வந்தோம்.

இதையடுத்து சரவணன் வேறு வேலை தேடினார். சரவணனின் உறவினர் பாலு என்பவர் முன்னாள் பாமக எம்எல்ஏ உலகரட்சகனிடம் வேலை பார்த்தார். பாலுவின் சிபாரிசு செய்ததால் என் கணவருக்கு உலகரட்சகன் கார் டிரைவர் வேலை தந்தார். 6 மாதமாக அவர் வேலை பார்த்து வந்தார்.

எனது கணவருக்கு ரூ.4,000 சம்பளம் தந்தனர். அதில் ரூ.1,800யை வீட்டு வாடகைக்கு கொடுத்துவிட்டு மிகவும் கஷ்டத்தோடு குடும்பம் நடத்தி வந்தோம்.

இந் நிலையில் டாக்டருக்குப் படிக்கும் உலகரட்சகனின் இளைய மகன் என் கணவர் மீது அடிக்கடி புகார் சொல்ல ஆரம்பித்தார். ஒரு நாள் என் கணவரை மிக மோசமாக திட்டினார். உலகரட்சகனும் மிகக் கேவலமாக திட்டி வேலையை விட்டு நீக்கிவிட்டார்.

இதனால் உலகரட்சகன் குடும்பத்தை பழிவாங்க திட்டமிட்டோம். அவரது வீட்டில் ஏராளமான நகை, பணம் இருப்பதை என் கணவர் பார்த்துள்ளார்.

உலகரட்சகன் காலையில் வெளியே போனால் பிற்பகலில் தான் வீடு திரும்புவார். உலகரட்சகனின் மகனும் காலையிலேயே கல்லூரிக்குப் போய்விடுவார். வீட்டில் உலகரட்சகனின் மனைவி அம்பிகா மட்டுமே தனியாக இருப்பார். பக்கவாத நோயால் தாக்கப்பட்ட அவருக்கு ஒரு கை சரியாக இயங்காது.

அருகில் உள்ள உலகரட்சகனின் தங்கை வீட்டில் இருந்துதான் தினமும் உலகரட்சகன் வீட்டுக்கு சாப்பாடு வரும். காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். அம்பிகா மட்டுமே தனியாக இருப்பார்.

இந்த விவரங்கள் என் கணவருக்குத் தெரிந்திருந்ததால் இந்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கலாம் என்று திட்டமிட்டோம். இதன்மூலம் உலகரட்சகனை பழிவாங்கிவிடலாம் என்றும் முடிவு செய்தோம்.

தலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு

Lakshmi Lakshmi
என்னை வீட்டுக்குள் அனுப்பி கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார் என் கணவர். பயமாக இருந்ததால் நான் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை.

ஆனால், எனக்கு தைரியம் தந்து கொள்ளை திட்டத்துக்கு சம்மதிக்க வைத்தார். என் கணவரின் மோட்டார் சைக்கிளில் நானும் அவரும் உலகரட்சகன் வீட்டுக்கு வந்தோம். தெருமுனையில் எனது கணவர் நின்று கொண்டார். நான் மட்டும் ஹெல்மட் அணிந்து ெகாண்டு வீட்டுக்குள் நுழைந்தேன்.

பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட அம்பிகாவை எளிதில் மிரட்டி கொள்ளையடித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் மாறாக அம்பிகா என்னோடு போராடினார். அவரது கழுத்தில் கத்தியை வைத்து, தாலியை பறிக்க முயன்றபோது தான் அவர் அடங்கினார். பீரோ சாவியைத் தந்தார்.

இதையடுத்து நகை, பணத்தை அள்ளிக் கொண்டு அம்பிகாவின் தலையை சுவரில் மோத வைத்து மயக்கமாக்கிவிட்டு தப்பினேன் என்று கூறியுள்ளார் லட்சுமி.

முனனதாக அம்பிகா தன்னுடன் போராடியபோது உன் வீட்டுக்காரரால் தான் என் குடும்பம் சீரழிந்துவிட்டது' என்ற வார்த்தையை லட்சுமி கூறியுள்ளார். இதை அம்பிகா போலீசாரிடம் கூறியபோது தான் உலகரட்சகனால் பாதிக்கப்பட்ட யாரோ இதைச் செய்துள்ளனர் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர்.

அந்த கோணத்தில் விசாரித்தபோது தான் சரவணன் மீது சந்தேகம் வந்து அவரை அமுக்கிவிட்டனர்.

கைதான லட்சுமியும் சரவணனும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+