துபாயில் கூடும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள்
துபாய்:
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் வருடாந்திர சந்திப்பு நாளை (28ம் தேதி) துபாயில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராய் விளங்கி வரும் துபாய் மாநகரில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ( 28 செப்டம்பர் 2007 ) மாலை நான்கு மணிக்கு துபாய் தேரா நாசர் சதுக்கம் அருகாமையிலுள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் வளைகுடா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் எம். ஜே. அப்துல் கபூர் சாஹிப், பொருளாளர் கே.ஏ. கலீல் அஹமது,
முதல்வர் டாக்டர் எம். ஷேக் முஹம்மது, துணை முதல்வரும், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எம்.எம். ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டு கல்லூரியின் முன்னாள் மாணவர்களைச் சந்தித்து உரையாட இருப்பதாக முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரக ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
அமீரக முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் ''துபாய் பிளாக்' எனும் விடுதிக் கட்டடம் ஏற்கனவே கல்லூரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் அமீரகத்தில் பணிபுரிந்து வரும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கல்லூரி வளர்ச்சிக்குத் தேவையான நல்ல பல கருத்துக்களை தெரிவிக்கலாம். நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களை ஜாபர் சித்தீக் 050 5489609 எனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications