இனாம் வாங்கிக் குவித்த ஐஏஎஸ் அதிகாரி மதுரை கோர்ட்டில் ஆஜர்!
மதுரை:
மதுரையில் தீபாவளிக்கு இனாம் வாங்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பிடிபட்ட ஐஏஎஸ் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தமிழக அரசின் சமுக நலத்துறையில் உயர் பதவியில் இருந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரமணியம்.
கடந்த 2003ம் ஆண்டு, மதுரைக்கு வந்த அவர், அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி தீபாவளி வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் இவர் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தினர்.
அப்போது சுப்ரமணியத்தின் அறையிலிருந்து தீபாவளி இனாமாக வசூலிக்கப்பட்ட ரூ. 1.50 லட்சம் பணம் பிடிபட்டது. இதையடுத்து சுப்ரமணியம் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த ஒட்டன் சத்திரத்தை சேர்ந்த கூட்டுறவு அதிகாரி ஜெகதீஷ்வரன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு மதுரை தலைமை குற்றவியல் நீதீமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரமணியமும், ஜெகதீஷ்வரனும் ஆஜரானார்கள்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அக்டோபர் 25 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications