கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்டப் போவதாக அறிவித்தவருக்கு வீட்டுக் காவல்!
கோவில்பட்டி:
புதுக்கோட்டைக்கு வரும் கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்டப் போவதாக அறிவித்த புரட்சி தமிழகம் கட்சியின் நிறுவனர் புரட்சி கவிதாசனை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்தனர்.
முதல்வர் கருணாநிதி இன்று புதுக்கோட்டை வந்துள்ளார். 5வது கட்ட இலவச வீட்டு மனைப் பட்டா மற்றும் நிலம் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை அவர் வழங்குகிறார்.
இதற்காக நேற்று இரவு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சிக்குக் கிளம்பிய கருணாநிதி இன்று காலை திருச்சி வந்தார். அங்கிருந்து அவர் புதுக்கோட்டைக்குச் சென்றார்.
இந்த நிலையில், புரட்சி தமிழகம் என்ற அமைப்பு முதல்வர் கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாக அறிவித்திருந்தது.
இந்த அமைப்பின் தலைவர் புரட்சி கவிதாசன் என்பவர் இதுகுறித்துக் கூறுகையில், முதல்வர் கருணாநிதியிடம், கடந்த ஒரு வருடமாக தேவேந்திர குல மக்களின் முக்கிய கோரிக்கைகளை எடுத்து கூற காத்திருந்தோம்.
கடந்த ஜனவரி மாதம் கோபாலபுரத்தில் முதல்வர் வீட்டை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தோம். உடனே முதல்வரை சந்திக்க அனுமதி அளிப்பதாக கூறி எங்களை ஏமாற்றிக் கைது செய்து விட்டனர்.
ஆனால் இம்முறை நாங்கள் ஏமாறப் போவதில்லை. புதுக்கோட்டைக்கு வரும் கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்டியே தீருவோம் என அறிவித்திருந்தார்.
இதையடுத்து கோவில்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு திருகோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசந்தர், மற்றும் முகேஷ் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் சென்ற போலீஸ் படை கவிதாசனை வீட்டுக் காவலில் வைத்தது.
இது குறித்து புரட்சிகவிதாசன் கூறுகையில், ஹிட்லர் ஆட்சி என்று வர்ணிக்கப்பட்ட ஜெயலலிதா ஆட்சியில் கூட ஜனநாயக முறையில் போராட அனுமதி வழங்கப்பட்டது.
ஜனநாயகம், சமூகநீதி, பகுத்தறிவு பேசும் கருணாநிதி ஆட்சியில் ஜனநாயக முறையில் கூட போராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கருணாநிதியின் கோழைத்தனத்தைக் காட்டுகின்றது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications