தோட்டாக்களுடன் விமானம் ஏற வந்த எம்.பி.
சென்னை:
கரூர் திமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமி, துப்பாக்கித் தோட்டாக்களுடன் விமானம் ஏற வந்தார். ஆனால் தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்து கொண்டு அவரை பயணம் செய்ய அனுமதித்தனர்.
கரூர் தொகுதி திமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமி. இவர் நேற்று திருச்சி வழியாக சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணிக்க சென்னை விமான நிலையம் வந்தார்.
பயணிகளிடம் நடத்தப்படும் வழக்கமான பாதுகாப்பு சோதனைக்காக நின்றிருந்தார் பழனிச்சாமி. அப்போது, அவரது சூட்கேஸை அதிகாரிகள் சோதனையிட்டபோது, எச்சரிக்கை ஒலி கிளம்பியது.
இதையடுத்து சூட்கேஸை அதிகாரிகள் திறந்து சோதனையிட்டனர். அப்போது அதில் 20 துப்பாக்கிக் குண்டுகள் இருந்தன. .32 ரக துப்பாக்கியில் பொருத்தப்படக் கூடியவை.
இதுகுறித்து எம்.பி.யிடம் அதிகாரிகள் கேட்டபோது, நான் உரிமத்துடன் கூடிய துப்பாக்கி வைத்துள்ளேன். அதில் பொருத்தப்படும் குண்டுகள்தான் இவை. தவறுதலாக எனது சூட்கேஸில் இது வந்து விட்டது என விளக்கினார்.
இருப்பினும் குண்டுகளுடன் பயணம் செய்ய முடியாது என்று கூறிய அதிகாரிகள், அவற்றை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கே.சி.பழனிச்சாமியிடம் இதுதொடர்பாக எழுதி வாங்கிக் கொண்ட அதிகாரிகள், அவரை விமானத்தில் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications