முஷாரப் வேட்பு மனு ஏற்பு போட்டியில் 6 வேட்பாளர்கள்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் முஷாரப் உள்ளிட்ட 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் அதிபர் தேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது. இதில் முஷாரப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் மக்தூம் ஆமின் பாஹிம், வக்கீல்கள் சார்பில் நீதிபதி வஜூதின் அகமது ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் பலரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். மொத்தம் 43 வேட்பாளர்கள் சார்பில் 71 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்பு மனுக்கள் பரிசீலனை தலைமை தேர்தல் ஆணையர் குவாசி பரூக் முன்னிலையில் நடந்தது.
முதலில் முஷாரப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 17 மனுக்களையும் ஏற்பதாக பரூக் அறிவித்தார். பின்னர் பாஹிம், வஜூதின் அகமது மற்றும் 3 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படுவதாக பரூக் அறிவித்தார்.
மிக பலத்த பாதுகாப்புடன் வேட்பு மனு பரிசீலனை நடந்தது. ஆயிரக்கணக்கான கமாண்டோக்கள் தேர்தல் ஆணையத்திற்கு வெளியே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications