நீதிபதிகள் எல்லோரும் சரியாக தீர்ப்பு சொல்கிறார்களா-பாலு
சென்னை:
நீதிபதிகள் எல்லோரும் சரியாகத்தான் தீர்ப்பு சொல்கிறார்களா?. அவ்வாறு சொன்னால் அப்பீல் என்பது எதற்கு? என மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறினார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய அவர்,
தமிழர்களின் உணர்வை மதிக்கும் வகையில் முழு அடைப்பு போராட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளனர்.
அதுவும் ஞாயிற்றுக்கிழமை அந்தத் தடை வழங்கப்பட்டுள்ளது. எதற்கு இந்த அவசரம்.இப்படியெல்லாம் விசித்திரம் நடக்கிறது. இதுவரை இப்படி ஒரு விசித்திரம் நடந்ததே இல்லை.
நீதிபதிகள் எல்லோரும் சரியாகத்தான் தீர்ப்பு சொல்கிறார்களா?. அவ்வாறு சொன்னால் அப்பீல் என்பது எதற்கு?. நீதிபதிகளுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வர சட்டத்தில் ஏன் இடம் தரப்பட்டுள்ளது?. இதையெல்லாம் நமது எம்பி, எம்எல்ஏக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
நேற்று வரை நீதிபதி. இன்று முன்னாள் நீதிபதி மீது ஊழல் புகார்கள். சேது சமுத்திரத் திட்டம் என்பது மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு. அதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
நீதிபதிகள் தவறு செய்தால் அதை இடித்துக் காட்டவும், சுட்டிக் காட்டவும் அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. அதைச் செய்யும் பொறுப்பு நமக்கு உள்ளது என்றார் பாலு.
ஜெ மீதான வழக்குகளில் தாமதம் ஏன்?- கருணாநிதி:
பின்னர் பேசிய முதல்வர் கருணாநிதி, சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான இந்த வழக்கில் அதீத வேகம் காட்டப்படுகிறது. அதே நேரத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலும் கோடநாடு எஸ்டேட் வழக்கிலும் ஏன் இந்த வேகம் இல்லை?.
அதற்கு காரணம் (ஜாதிகளை மறைமுகமாக குறிப்பிட்டு) நாம் வேறு, அவர்கள் வேறு என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications