5 கோடி வாடிக்கையாளர்கள்- ஏர்டெல் சாதனை!
டெல்லி:
இந்தியாவின் முன்னணி செல்போன் நிறுவனமான பார்தி ஏர்டெல் 5 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. 2010ம் ஆண்டில் இதை இரட்டிப்பாக்க பார்தி தீர்மானித்துள்ளது.
சுனில் மிட்டலின் பார்தி என்டர்பிரைசஸ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதிதான் ஏர்டெல். இந்த நிறுவனத்தின் பிராட்பேண்ட் மற்றும் தொலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5 கோடியைத் தொட்டுள்ளது.
இதுகுறித்து பார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் மனோஜ் கோலி கூறுகையில், உலகின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வரிசையில் தற்போது பார்தி இணைந்துள்ளது. 2010ம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை இரடிப்பாக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.
2004ம் ஆண்டு நவம்பரில் பார்தியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 1 கோடியாக இருந்தது. இது கடந்த ஜூலை மாதம் இரண்டரை கோடியாக உயர்ந்தது. தற்போது அதை விட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
பார்தியின் வாடிக்கையாளர்களில் 96 சதவீதம் பேர் வயர்லஸ் போன்களைப் (செல்போன்) பயன்படுத்துபவர்கள் ஆவர்.
உலக வயர்லஸ் தொலைத் தொடர்புத் துறை சந்தையில் இந்தியா ஒரு வளரும் நாடாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இத்துறையில் இந்தியா 80 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
நகர்ப்புறங்களைப் போலவே ஊரகப் பகுதிகளிலும் பார்தி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் ஊரகப் பகுதிகளிலும் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் சேருவார்கள் என்று அது நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications