சுற்றுலா சென்ற மாணவன் சாவு: மதுரை பள்ளி தாளாளருக்கு சிறை தண்டனை
மதுரை:
பள்ளியிலிருந்து சுற்றுலா அழைத்து செல்லப்பட்ட மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பான வழக்கில் மதுரையைச் சேர்ந்த பள்ளி தாளாளர் உட்பட 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மதுரை, தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள விஷாந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ரமேஷ்பாபு (15) என்ற மாணவன் 9ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2003ம் ஆண்டு பள்ளியிலிருந்து மாணவ-மாணவிகள் நெல்லை மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர்.
அப்போது தடாகத்தில் மாணவர்கள் அனைவரையும் ஆசிரியர்கள் குளிக்க அனுமதித்தனர். இதில் ரமேஷ் பாபு என்ற மாணவன் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்து விட்டான். இது தொடர்பான வழக்கு அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அன்புச்செல்வி, சுற்றுலா அழைத்து வரும் மாணவ-மாணவியருக்கு நீச்சல் தெரியுமா, தெரியாதா என்பதை கவனிக்க வேண்டியது ஆசிரியரின் கடமையாகும்.
இதில் ஆசிரியர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இதை கவனிக்காதது பள்ளி ஆசிரியர்களின் தவறாகும். அவர்களின் கவனக்குறைவால் தான் மாணவர் ரமேஷ்பாபு நீரில் மூழ்கி இறந்துவிட்டார்.
எனவே சுற்றுலா அழைத்து வந்த பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் விமலா ரவீந்திரன் (51) மற்றும் பள்ளி ஆசிரியர் ராஜாராம் (35) ஆகியோருக்கு 6 மாத சிறைத் தண்டனையும், ரூ. 2000 அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications