இரு சாலை விபத்தில் 5 பேர் பலி
தர்மபுரி:
தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களித்தில் நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துக்களில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் உள்ள நாகச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (32). இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் ஓகேனக்கலுக்கு சுற்றுலா சென்றார்.
இவர்களுடைய கார் நேற்று காலை தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சென்றபோது, குல்லாத்திரம்பட்டி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து தெருக்குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த கோகிலா (20), மீனா(13) மற்றும் காரில் வந்த ஆனந்தகுமார் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் வீரமணி (25) என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் அருகே இருவர் பலி:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகில் உள்ள சூரியகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம்(36). இவர் தனது நண்பர் விஜயகுமாருடன்(28) திருச்சியிலிருந்து நேற்று அதிகாலை காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
நாமக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் வேப்பநத்தம் அருகே வந்தபோது, பெங்களூரிலிருந்து திருச்சி சென்ற லாரி, கார் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் காரில் பயணம் செய்த சதாசிவம், விஜயகுமார் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்துகள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications