உச்ச நீதிமன்றத்தில் அரசு, முதல்வர், பாலு மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது அதிமுக
டெல்லி:
சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 1ம் தேதி பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பந்த்தை எதிர்த்து அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பந்த் நடத்த தடை விதித்தனர். இதையடுத்து அன்றைய தினம் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. முதல்வர் கருணாநிதி தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பஸ்கள் நிறுத்தப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டன. இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதை எதிர்த்தும் பஸ்களை உடனடியாக இயக்கக் கோரியும் அதிமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம் என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் முதல்வர் கருணாநிதி. பஸ்களும் இயக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று முதல்வர் கருணாநிதி, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு, தலைமைச் செயலாளர் திரிபாதி ஆகியோர் மீது உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அவமதிப்பு வழக்கை அதிமுக தொடர்ந்துள்ளது.
கடந்த திங்களன்று தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதை வீடியோவாக தொகுத்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்யவுள்ளது.












Click it and Unblock the Notifications