திமுகவினர் மீது தாக்குதல்: அதிமுக மா.செ. கைது வேலூர் சிறையில் அடைப்பு!
வேலுர்:
திமுகவினர் மீது தாக்குதல் நடத்தியதாக திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளர் கைது செய்யப்பட்டார். வேலூர் சிறையில் அவரை போலீஸார் அடைத்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திமுகவினர் சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி பெரியார் சிலை அருகில் உண்ணாவிரதம் இருந்தனர்.
அப்போது திமுக அரசைக் கண்டித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை வரவேற்று அதிமுக மாவட்ட செயலாளர் காமராஜ் சார்பில் பட்டாசு வெடித்தனர்.
இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிமுக திமுகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. கல், சோடா பாட்டில், வீசப்பட்டது. இதனால் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி அனைவரையும் கலைத்தனர்.
இதையடுத்து திமுக கவுன்சிலர் கரிகாலன் போலீஸ் ஒரு புகார் கொடுத்தார். அதில், அதிமுகவினர் திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தியுடன் திமுகவினரையும் தாக்கியதாக தெரிவித்திருந்தார்.
அதன் பேரில் அதிமுக மாவட்ட செயலாளர் காமராஜ், அதிமுக நகர செயலாளர் சாமிநாதன், ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் உள்பட 6 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தது. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு அவர்களை அனுமதிக்க சிறை நிர்வாகம் மறுத்ததால், வேலூர் சிறைக்குக் ெகாண்டு சென்று அங்கு அடைத்தனர்.












Click it and Unblock the Notifications