மயங்க வைத்து பணம், நகையைப் பறித்த மசாஜ் சுந்தரிகள்
சென்னை:
மசாஜ் செய்து கொள்ளப் போய் ரூ. 3,000 பணம், தங்கச் சங்கிலி உள்ளிட்டவற்றைப் பறிகொடுத்து விட்டுத் திரும்பியிருக்கிறார் சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர்.
சென்னை டைடல் பூங்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்டவேர் என்ஜீனியராக இருப்பவர் ராமு. ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒரு விளம்பரத்தைப் பார்த்தார். அது ராமுவைக் கவருவதாக இருந்தது. காரணம் அது ஒரு மசாஜ் விளம்பரம்.
மசாஜ் செய்தால் உடல் வலி போகும் என பலர் கூறிக் கேட்டிருந்ததால், அந்த நாளிதழில் வந்திருந்த மசாஜ் விளம்பரத்தைப் பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த எண்ணைத் தொடர்பு கொண்டார்.
அதில் ஒரு பெண் பேசியுள்ளார். அவரிடம் மசாஜ் செய்ய வேண்டும், விளம்பரம் பார்த்தேன் என்று வெள்ளந்தியாக பேசியுள்ளார் ராமு. இதையடுத்து அந்தப் பெண், படு கொஞ்சலாக நேரில் வாங்க, உடல் நோவு அனைத்தையும் சரி செய்து விடுகிறோம் என்று கூறியுள்ளார்.
மசாஜை விட அவரது குரல் ராமுவைக் கவரவே, சட்டென்று அங்கு போயுள்ளார். புரசைவாக்கத்தில் அந்த மசாஜ் நிலையம் உள்ளது. ஒரு குறுகிய இடத்தில், 2வது மாடியில் அந்த மசாஜ் நிலையம் இருந்தது.
அங்கு சென்ற ராமுவை, வனப்பு மிக்க ஒரு கேரளத்து சுந்தரி வரவேற்றார். அவரைப் பார்த்தவுடனேயே ராமுவுக்கு பரவசம் தொற்றிக் கொண்டு விட்டது. அந்த அளவுக்கு அவர் பரந்து விரிந்த நெஞ்சத்துடன் காணப்பட்டார்.
ராமுவை உள்ளே கூட்டிச் சென்ற அந்தப் பெண்மணி, அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டு விலைப் பட்டியலை எடுத்து நீட்டியுள்ளார். அதில் ரூ. 500 முதல் ரூ. 3000 வரை பல்வேறு வகையான மசாஜ் முறைகள் உள்ளதாக தெரிவித்தார்.
எதை எடுப்பது, எதை விடுவது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருந்த ராமுவின் நிலையை பயன்படுத்தி, ஆயில் மசாஜ் எடுத்தால் அதிலேயே எல்லாம் அடங்கி விடும். ஒரு பெண் செய்வதாக இருந்தால் ரூ. 1,000 தர வேண்டும். 2 வேண்டும் என்றால் ரூ. 2,000 தர வேண்டும் என கூறியுள்ளார் அந்த அழகி.
உணர்ச்சியின் உச்சத்திற்குப் போய்க் கொண்டிருந்த ராமு, 2 பெண்களே இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.
பின்னர் அவரை ஒரு ரூமுக்குள் அனுப்பி வைத்தார் அந்தப் பெண். அங்கு கட்டுக்கடங்காத அழகுடன் 2 பெண்கள் வந்து மேற்படி வேலைகளை ஆரம்பித்தனர்.
ராமுவின் உடைகளை களைந்த அவர்கள், உணர்ச்சியின் உச்சத்திற்கு ராமுவைக் கொண்டு சென்று மயங்க வைத்தனர். பெண்களின் ஸ்பரிசத்தால் மயங்கிப் போய்க் கிடந்த ராமுவுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு சுகானுபவத்தில் சொக்கிக் கிடந்தார் ராமு.
இந்த நிலையில் இரு பெண்களும், ராமு அணிந்திருந்த 2 பவுன் தங்க மோதிரம், 3 பவுன் தங்கச் சங்கிலியைக் கழற்றி தங்களது ஜாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டனர். இதுதவிர வெளியில் இருந்த பெண்ணிடம் கொடுத்த ரூ. 2,000 பணம் போக சட்டைப் பையில் வைத்திருந்த 3,000 ரூபாயையும் சுருட்டிக் கொண்டனர்.
எல்லாம் முடிந்து குளித்து வந்த பிறகுதான் தான் போண்டி ஆனதை உணர்ந்தார் ராமு. இதுகுறித்து அமுக்கி விட்ட அழகிகளிடம் கேட்டபோது, தாம் தூம் என கத்த ஆரம்பித்துள்ளனர்.
கற்பழித்து விட்டாய் என கூறி ஊரைக் கூட்டவா, போலீஸைக் கூப்பிடவா, அவர்களே எங்களின் கஸ்டமர்கள்தான் என்று கூறி சப்தம் போட ஆரம்பித்தனர். பயந்து போன ராமு அங்கிருந்து தப்பி ஓடி வந்து விட்டார்.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, அப்படியெல்லாம் மசாஜ் என்ற பெயரில் தவறாக எதுவும் நடக்கவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் இன்னும் அங்கு மசாஜ் மகா அமோகமாக நடந்து வருகிறதாம்.












Click it and Unblock the Notifications