அமெரிக்கா-1,300 சட்டவிரோத குடியேறிகள் கைது

Subscribe to Oneindia Tamil


லாஸ் ஏஞ்சலெஸ்:

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் கடந்த 2 வாரங்களாக நடந்த அதிரடி சோதனையில், சட்டவிரோதமாக குடியேறியிருந்த 30 நாடுகளைச் ேசர்ந்த 1300 குற்றவாளிகள், சட்டவிரோத குடியேறிகள் பிடிபட்டனர்.

அமெரிக்க வரலாற்றிலேயே நடந்துள்ள மிகப் பெரிய சோதனை இது என்று அமெரிக்க அதிகாரிள் தெரிவித்துள்ளனர். இன்று மட்டும் 530 சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கத் துறை அதிகாரிகள் வளைத்துப் பிடித்துள்ளனர்.

இதுதவிர 800 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஏற்கனவே குடியுரிமைத் துறை பிறப்பித்த உத்தரவை மதிக்காமல் தலைமறைவாக இருந்தவர்கள்.

இதுகுறித்து குடியுரிமை மற்றும் சுங்கத் துறை உதவி செயலாளர் ஜூலி மேயர்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த இரு வாரங்களில் நடந்த ரெய்டுகள் மூலம் மொத்தம் 1300 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களில் சட்டவிரோத குடியேறிகள் தவிர கிரிமினல் சம்பவங்களில் தொடர்புடையவர்களும் அடங்குவர்.

பாலியல் குற்றங்கள், தாக்குதல், கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் இவர்களுக்குத் தொடர்பு உள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை அனுமதிக்க முடியாது. தொடர்ந்து இதுேபான்ற நடவடிக்கைகள் நடைபெறும் என்றார்.

கைது செய்யப்பட்டவர்களில் மெக்சிகோ நாட்டைச் ேசர்ந்தவர்கள்தான் அதிகம். இதுதவிர இந்தியா, ஆர்மீனியா, இந்ேதானேசியா, ஜோர்டான், பெரு உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அடக்கம்.

600க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 10.2 லட்சம் சட்டவிரோத குடிேயறிகள் தங்கியிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் மீது இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே அமெரிக்க நிர்வாகம் நடவடிக்ைக எடுத்து வருகிறது.

சட்டவிரோத குடியேறிகளுக்கு வேலை வழங்கியுள்ள நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது, வழக்கு தொடருவது என அதிரடி நடவடிக்ைகயில் அமெரிக்க அரசு இறங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+