கூடங்குளம்- நிறைவுபெறும் நிலையில் 2 அணு மின் உலைகள்!
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
இந்திய அணுசக்தி கழகம் சார்பில் கூடங்குளத்தில் 2 அணுமின் உலை கட்டுமான பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன.
இந்திய அணுசக்தி கழகம் சார்பில் கூடங்குளத்தில் 6 அணு உலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. இதில் 2 அணு உலைகளில் பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இவை 2008ம் ஆண்டு மின் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தொழில்நுட்பத்தை ரஷ்யா தந்து உதவியுள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் 13க்கும் மேற்பட்ட அணு உலைகள் வெற்றிக்கரமாக செயல்பட்டு வருகின்றன. கூடங்குளத்தில் இந்த இரு உலைகள் தவிர மேலும் 4 அணு உலைகள் அமைக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications