என்னை பின்பற்றாதீர்கள்' - லியாகத் கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil


சென்னை:

எதிலும் ஒரு அளவு இருக்க வேண்டும். அளவுக்கு மீறிப் போனால் அமிர்தமும் கூட நஞ்சுதான். அதை நான் மிகவும் தாமதமாகப் புரிந்து கொண்டுள்ளேன். இளைஞர்களுக்கு நான் விடுக்கும் கோரிக்கை, தயவு செய்து என்னைப் போல நடந்து கொள்ளாதீர்கள் என்று கல்யாண மன்னன் லியாகத் அலிகான் கோரிக்கை விடுத்துள்ளார்.

Liyakat Ali
Click here for more images

மாப்பிள்ளை வேடம் போட்டு நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கை, கற்பு, பணத்துடன் விளையாடி, சிறையில் அடைபட்டுள்ளார் லியாகத் அலிகான்.

இப்படியும் கூட மோசடி செய்ய முடியுமா என்று 'பெத்த பெத்த' கிரிமினல்களையும் கூட வியக்க வைக்கும் வகையில் புகுந்து விளையாடியுள்ள லியாகத் அலியை போலீஸார் 8 நாள் காவலில் எடுத்து பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச் சென்று அவரது லீலைகள் குறித்து விசாரணை நடத்தி ஆதாரங்களையும், வாக்குமூலங்களையும் பெற்றுள்ளனர்.

ஆரம்பத்தில் அல்டாப் பேர்வழியாக, நான் செய்ததில் என்ன தவறு என்று லாஜிக் பேசி வந்த லியாகத், பிறகு போலீஸாரின் அன்பான விசாரணையில் பல உண்மைகளை கக்கியுள்ளார். இப்போது தத்துவமும் பேச ஆரம்பித்துள்ளார்.

சென்னை தனிப்படை போலீஸாரிடம் லியாகத் அலி கொடுத்துள்ள லேட்டஸ்ட் வாக்குமூலம் ...

திருச்சி பாலக்கரையில் இன்பர்மேஷன் சென்டர்' என்ற பெயரில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வந்தேன். எங்களது மத முறைப்படி இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டேன். பல பெண்களிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களை ஏமாற்ற நினைக்கவில்லை. சுக போகத்துக்கு ஆசைப்பட்டு பெண்கள்தான் என்னிடம் ஏமாந்தார்கள்.

பிளஸ்-2 படித்த பிறகு கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றேன். எனது கம்ப்யூட்டர் அறிவை பயன்படுத்தி வாழ்க்கையை அனுபவிக்க திட்டமிட்டேன். அதில் வெற்றியும் பெற்றேன்.

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் நான் பழகி இருக்கிறேன். எனது பேச்சாலும், பெண்களுக்கு பிடித்தமான விதத்தில் நடந்து கொண்டும் அவர்களை மயக்கினேன். என் வலையில் விழுந்த பெண்கள் என்னையே சுற்றிச் சுற்றி வந்தார்கள். திருமணம் செய்வதாக கூறி அவர்களை ஏமாற்றி வந்தேன்.

ஊக்க மாத்திரை பயன் படுத்தி பல பெண்களுடன் செக்ஸ்' தொடர்பு வைத்துக் கொண்டேன்.

நக்மாவும், நானும் ..

என்னை விட்டு விலக முடியாத பெண்கள் சிலரை என் நண்பர்களுக்கு விருந்து ஆக்கினேன். தொடர்ந்து பல பெண்களுடன் நான் செக்ஸ் வைத்துக் கொண்டதால் எனக்கு தோல் வியாதி வந்து விட்டது.

துணை நடிகைகள் பலருடனும் எனக்கு தொடர்பு இருந்தது. அவர்களுடன் செக்ஸ் உறவு வைத்திருந்தேன்.

ஒருமுறை திருச்சி பாலக்கரையில் நடந்த சினிமா படப்பிடிப்பின் போது நடிகை நக்மாவிடம் அறிமுகமானேன்.
இருவரும் நல்ல நண்பர்கள். என் பெயரை சொன்னாலே போதும். அவருக்கு என்னை நன்றாகத் தெரியும்.

இதேபோல நடிகை நமீதாவும் கூட எனக்கு நண்பர்தான். இருவரும் நல்ல நண்பர்களாகப் பழகினோம். வேறு ஒன்றும் இல்லை. அதில் என்ன தப்பு இருக்கிறது.

தேடித் தேடி வந்தார்கள் ...

பெண்களை எப்படி மயக்க வேண்டும் என்று நான் திட்டமிட்டு நடந்து கொண்டேன். பெண்களின் உள்மனதில் இருந்த ஆசைகளை அறிந்து செயல்பட்டேன். எனவே என்னுடன் பழகிய பெண்கள் மீண்டும் மீண்டும் என்னை தேடி வந்தார்கள். நூறு ஆண்டுகள் வாழ்ந்து அனுபவிக்க வேண்டியதை மூன்றே ஆண்டுகளில் விதம் விதமாக அனுபவித்து விட்டேன்.

'அட்வைஸ் ..'

'செக்ஸ்' ஆர்வம் உள்ள வாலிபர்கள் என்னை பின் பற்ற வேண்டாம். அழிந்து போய் விடுவீர்கள். யாரும் என்னை பின்பற்றாதீர்கள். எல்லாவற்றுக்கும் அளவு உண்டு. அதை மிஞ்சினால் அமிர்தம் மட்டும் அல்ல எல்லாமே நஞ்சுதான்.

நூறுக்கும் மேற்பட்ட பெண்களுடன் நான் பழகி விட்டேன். ஒவ்வொரு பெண்ணின் விருப்பமும் ஒரு விதம். அந்த அனுபவம் பற்றி புத்தகம் எழுதுவேன்.

புளு பிலிம்களிலும் நடித்திருக்கிறேன். என் வீட்டில் இருந்து 7 புளு பிலிம் சி.டி.க்கள் எடுக்கப்பட்டது. அதில் 2 சி.டி.க்களில் நான் நடித்த காட்சிகள் உள்ளன. நான் செய்தது தவறு என்பதை உணர்ந்து கொண்டேன். இனி திருந்தி வாழ விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் லியாகத்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+