பாலக்காட்டுக்கு எதிர்ப்பு: பொள்ளாச்சியில் 5ம் தேதி மதிமுக கண்டனப் பேரணி!

Subscribe to Oneindia Tamil


சென்னை:

பொள்ளாச்சி, கிணத்துக்கடவை பாலக்காடு கோட்டத்துடன் இணைத்ததை எதிர்த்து மதிமுக சார்பில் 5ம் தேதி பொள்ளாச்சியில் பிரமாண்ட கண்டனப் பேரணி நடத்தப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் ரயில் கோட்டத்தில் கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ப்பதற்குப் பதிலாக, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய மதுரை கோட்ட பகுதிகளை பால்ககாடு கோட்டத்துடன் இணைத்து அநீதியான முடிவை எடுத்துள்ளனர்.

இதற்கு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட திமுக எம்.பிக்களும், முதல்வர் கருணாநிதியுமே காரணம்.

கருணாநிதியின் வஞ்சக முடிவை எதிர்த்து பொள்ளாச்சி மக்கள் பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிமுக, மதிமுகவும் போராட்டங்கள் நடத்தின. மதிமுக சார்பில் நான் பிரசார இயக்கம் நடத்தினேன்.

இதையடுத்து 5ம் தேதியன்று பொள்ளாச்சியில் மதிமுக சார்பில் பிரமாண்ட கண்டனப் பேரணி நடத்தப்படும் என கூறியுள்ளார் வைகோ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+