தூத்துக்குடியில் மினி பஸ் நடத்துனர் கொலை

Subscribe to Oneindia Tamil


தூத்துக்குடி:

பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த நடத்துனர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோவில்பட்டி அருகேயுள்ள செட்டிக்குறிச்சியைச் சேர்ந்தவர் மோகன். இவர் தனியார் மினி பஸ்சில் நடத்துனராக பணி புரிந்து வந்தார். இன்று அதிகாலை கடம்பூர் ஓனாமாக்குளம் பகுதியில் பேருந்தில் டிரைவர் முனுசாமியும், நடத்துனர் மோகனும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு கும்பல் பேருந்தில் ஏறி நடத்துனர் மோகனை தாக்கி அவரிடம் இருந்த பணப் பையை பறித்தது. அதை மோகன் தடுத்தபோது அவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் அங்கிருந்து தப்பியோடியதால் உயுர் பிழைத்துள்ளார்.

இந் நிலையில் கொலையாளிகளைக் கைது செய்ய கோரி கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன் ேமாகனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலை செய்யப்பட்ட மோகனின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து மினி பஸ்சின் டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+