இந்து முன்னணி கூட்டத்திற்கு போலீஸ் தடை !
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்து முன்னணி கூட்டத்திற்கு போலீஸ் தடை விதித்துள்ளது..
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்து முன்னணி சார்பில் 5ம் தேதி பொதுக் கூட்டம் நடத்த முடிவானது. இக்கூட்டத்தில் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம. கோபாலன், மாநில செயலாளர் நாகேந்திரன், மாநில துணை தலைவர் பாண்டியன் ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது.
இந்த கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி வேண்டி இந்து முன்னணியினர் மணப்பாறை காவல் நிலையத்தை அனுகினர். ஆனால் போலீஸ் தடை உத்தரவு அமுலில் இருப்பதால் பொது கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி மறுத்து விட்டது.












Click it and Unblock the Notifications