இமாச்சல பிரதேசம், நியூசிலாந்தில் நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil


சிம்லா&வெலிங்டன்:

இமாச்சல பிரதேசத்தின் இரு மாவட்டங்களில் இன்று காலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இமாச்சல பிரதேசத்தில் சம்பா மற்றும் கங்ரா மாவட்டங்களில் இன்று காலை 10.44 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் ஆடின. வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

ஆறு வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டது குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை.

நியூசிலாந்திலும் நிலநடுக்கம்:

இந் நிலையில் நியூசிலாந்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் இன்று அதிகால இந்திய நேரப்படி 5.30 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக ஆடின. வீடுகளில் இருந்த மக்கள் பயந்து வீதிக்கு ஓடி வந்தனர்.

இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+