நவ-1ல் உருவாகிறது சேலம் கோட்டம்- 'கெஜட்டில்' அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை:
ஒரு வழியாக சேலம் ரயில்வே கோட்டத்தை வரும் நவம்பர் 1ம் தேதி ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் துவக்கி வைக்கவுள்ளார்.
கேரளத்தின் பாலிடிக்ஸையும் மீறி, ஏகப்பட்ட தடைகள், போராட்டங்களுக்குப் பின் உருவாகிறது இந்த சேலம் கோட்டம்.
இந்த கோட்டத்தை உருவாக்குவது குறித்து மத்திய அரசின் கெஜட்டில் ரயில்வே வாரியம் ஆணை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து இதன் துவக்க விழா குறித்து திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் ரயில்வே கோட்டத்துக்கு தனியான அலுவலகம் கட்டி முடிக்கப்படும் வரை அது ரயில்வே குவார்டர்சில் உள்ள தாற்காலிகமான கட்டத்தில் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1ம் தேதி நடக்கவுள்ள நிகழ்ச்சியில் கோட்டத்தை லாலு பிரசாத் துவக்கி வைக்கிறார். முதல்வர் கருணாநிதி இதில் பங்கேற்கிறார்.
அப்போது சேலம்-விருதாச்சலம் இடையிலான புதிய அகல ரயில் பாதையும் திறந்து வைக்கப்படும்.
இந் நிலையில் ரயில்வே இணையமைச்சர் வேலு நாளை சென்னையில் தென்னக ரயில்வே அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையும் நடத்துகிறார். கோட்டப் பணிகள் குறித்து இக் கூட்டம் நடக்கிறது.
சேலம் கோட்டத்தில் 862 கி.மீ வழித்தடங்கள் இணைந்துள்ளன.












Click it and Unblock the Notifications