பள்ளியில் ஈவ்-டீசிங்: மாணவர்கள் மோதல்- 6 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil


சேலம்:

சேலத்தில் பள்ளி மாணவிகளை கேலி செய்த விவகாரத்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 6 மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம், சிவதாபுரத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் இருபாலரும் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் படிக்கும் ஜூனியர் மாணவிகளை, சீனியர் மாணவர்கள் அடிக்கடி கேலி செய்து வந்துள்ளனர்.

சீனியர் மாணவர்கள் ஈவ்-டீசிங் செய்வதை ஒடுக்க மாணவிகள் தங்களுடன் படிக்கும் சக மாணவர்களிடம் இந்த பிரச்சனையை சொல்லியுள்ளனர்.

தங்களோடு படிக்கும் மாணவியை கிண்டல் செய்தவர்களை தட்டிக் கேட்க மாணவர்கள் சீனியர் மாணவர்களுடன் சண்டை போட்டுள்ளனர். இதில் இருதரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டு 6 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பள்ளியில் மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+