இரு குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே இன்று காலை குழந்தைகள் இருவரையும் கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அபினா பேகம்(26). இவரது மகள் நபிஷா சபினா (3), மகன் சம்சுதீன்.
இவர் பிலத்து கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். இன்று காலை வெகுநேரமாகியும் அவர் தங்கியிருந்த அறை திறக்காமல் இருந்ததை கண்ட உறவினர்கள் கதவை உடைத்துப் பார்த்தனர்.
அப்போது அபினா பேகம் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர். இரு குழந்தைகளும் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தனர்.
குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications