காங். ஆட்சியால் இந்தியா பயங்கரவாத மையமாக மாறி விட்டது - இல.கணேசன்
திருநெல்வேலி:
காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா பயங்கரவாத மையமாக மாறி விட்டது என்று பாஜக மாநில தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இன்று நெல்லை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3,674 பேர் பயங்கரவாத தாக்குதலில் பலியாகியுள்ளனர். இது சமீபத்தில் ஈராக்கில் நடந்த வன்முறை தாக்குதலை விட அதிகமானது. பயங்கரவாத தாக்குதலில் 10 ஆண்டுகளில் 53 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
ஆனால் இந்தியா-பாகிஸ்தான் போரில் இறந்தவர்கள் 8023 பேர். அதைவிட தற்போது அதிகமானோர் பயங்கரவாத தாக்குதலில் பலியாகி வருகின்றனர். இந்திய அரசின் கணக்கெடுப்பின் படி 13 மாநிலங்களில் 103 மாவட்டங்கள் பயங்கரவாத பிடியில் சிக்கியுள்ளது.
இதில் வடக்கு-கிழக்கு மாநிலங்கள், அல் கொய்தா மற்றும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலின் போது தீவீரவாதிகளின் ஆதரவு பெற்றுதான் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்றதில் இருந்து 50 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
அசாம் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரிப்பதற்கான சதி நடவடிக்கை நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ பணியை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இஸ்லாமிய பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. இதனால் தான் தென்காசியில் தொடர் கொலைகள் நடந்துள்ளன.
மனித நீதிப்பாசறை என்ற அமைப்பு திமுகவின் ஆட்சியில் தான் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அதிகளவில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் மத்திய அரசு பயங்கரவாதம், தீவிரவாதத்தை ஓடுக்குவதற்கு பொடா சட்டத்தை நீக்கிவிட்டு சாதாரண சட்டத்தின் முலம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து வருகிறது. தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை பொடா சட்டம் இல்லாமல் தடுக்க முடியாது என்று அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications