சேது சமுத்திரத் திட்டம்: ராஜ் டிவியின் சிறப்பு டாக்குமெண்டரி- நாளை ஒளிபரப்பு
திருச்சி:
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான 40 நிமிட டாக்குமென்டரிப் படத்தை ராஜ் டிவி நாளை ஒளிபரப்பவுள்ளது.
திமுகவுக்கும், சன் டிவிக்கும் இடையே பிரச்சினை உருவாகி, இருவரும் பிரிந்த பின்னர் திமுகவுடன், ராஜ் டிவி நெருங்கத் தொடங்கியது. உச்சகட்டமாக ராஜ் டிவி அதிபர் ராஜேந்திரன் தனது சகோதரர்களுடன் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவிலும் இணைந்தார்.
இதையடுத்து ராஜ் டிவியின் ஒளிபரப்பு தரம் தெள்ளத் தெளிவானது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி ஒளிபரப்புக்கான வசதிகளும் மீண்டும் தரப்பட்டன. செய்திகளும் மீண்டும் ஒளிபரப்பாகத் தொடங்கியது.
இந்த நிலையில் நாட்டையே உலுக்கி வரும் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான டாக்குமென்டரிப் படத்தை ராஜ் டிவி தயாரித்துள்ளது. சமுத்திரத்தில் ஒரு சரித்திரம் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த விளக்கப் படம் நாளை முதல் ராஜ் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
நாளை காலை 8 மணிக்கு இந்த விளக்கப் படம் ஒளிபரப்பாகிறது. கடலியல் நிபுணர்கள், நிலவியல் நிபுணர்கள், கடல் உயிரின நிபுணர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசித்து அதன்படி இந்த விளக்கப் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
இந்தப் படத்தை ஜி.எல்.நரசிம்மன் தயாரித்துள்ளார். சர்ச்சைக்குரிய ஆதம் பாலம் (ராமர் பாலம்) குறித்தும், தற்போது நடந்து வரும் கடல் அகழ்வுப் பணகிள் குறித்தும் இந்தப் படத்தில் விளக்கப்பட்டுள்ளது.
மேலும், நாகப்பட்டனம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் கருத்துக்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
கடந்த 24ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது இந்த டாக்குமெண்டரி போட்டுக் காட்டப்பட்டதாம்.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சி தயாரித்துள்ள முதல் விளக்கப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சேது சமுத்திரத் திட்டம் குறித்து பொதுமக்கள் விரிவாக தெரிந்து கொள்ள முடியும் என்று நரசிம்மன் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications