சென்னையைக் கலக்கும் கேரள அழகிகளின் விபச்சாரம் - இன்று 6 பேர் கைது

Subscribe to Oneindia Tamil


சென்னை:

சென்னையில் கேரள பெண்களின் விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது. இன்று அடுக்குமாடிக் குடியிருப்பில் விபச்சாரம் நடத்திய கேரள பெண் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையில் கேரள பெண்கள் நடத்தி வரும் விபச்சாரத் தொழில் கொடி கட்டிப் பறக்கிறது. யாருக்கும் கட்டுப்படாமல் அவர்கள் நடத்தி வரும் இந்த விபச்சாரத் தொழில் நாளுக்கு நாள் பலம் பெற்று கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக மசாஜ் என்ற பெயரில் இவர்கள் நடத்தி வரும் விபச்சாரத் தொழில் நகரெங்கும் பரவி வாலிபர்களையும், அப்பாவிகளையும் அலைக்கழித்து வருகிறது. சமீபத்தில் கூட மசாஜ் என்ற பெயரில் சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவரின் நகை, பணத்தைப் பிடுங்கிக் கொண்டு விரட்டியுள்ளது கேரளத்து பெண் கும்பல் ஒன்று.

இந்த நிலையில், சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடமான சூளைமேடு பகுதியில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து அதில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல்கள் வந்தது.

இதையடுத்து விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் சூளைமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை முற்றுகையிட்டனர்.

போலீசார் நடத்திய சோதனையில், விஜயலட்சுமி மேனன் என்ற பெண் புரோக்கர் தலைமையில் வெகுஜோராக விபச்சாரம் நடந்து வருவது தெரிந்தது.

மாதம் 40 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து, அந்த வீட்டை விபச்சார விடுதியாக மாற்றியுள்ளார் விஜயலட்சுமி. உல்லாசமாக இருக்க விரும்பும் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் விதமாக, அனைத்து அறைகளிலும் டிவி, சிடி பிளேயர் வைக்கப்பட்டிருந்தது.

வாடிக்கையாளர்களை கவர ஆபாச சிடியை போட்டு அதன்படி அழகிகளிடம் உல்லாசமாக இருக்க பல யுத்திகளை கையாண்டுள்ளார் விஜயலட்சுமி. இவரின் வித்தியாசமான அணுகுமுறையால் இவருக்கு விஐபி வாடிக்கையாளர்கள் அதிகமாம்.

தற்போது இவர் விபச்சாரம் செய்த வீட்டை அட்வான்ஸ் கொடுத்து வாடகைக்கு பிடித்து கொடுத்ததே சென்னையை சேர்ந்த ஒரு தொழிலதிபர் தானாம். இவருக்கு அதிகளவு வாடிக்கையாளர்கள் கேரளாவில் இருந்து தான் வருவார்களாம்.

விபச்சாரம் செய்த வீட்டில் இருந்த டிவிக்கள், டிவிடி பிளேயர்கள் மற்றும் ஆபாச சிடிக்கள், சொகுசு கார், 3 செல்போன்கள், 3 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பெண் புரோக்கர் விஜயலட்சுமி மேனன், விபச்சார அழகி மிச்சேர், கார் டிரைவர் கோபிநாத், உதவியாளர் ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வேளச்சேரியில் விபச்சாரம்:

சோதனை நடத்திக் கொண்டிருக்கும்போதே விபச்சார தடுப்புப்பிரிவு போலீசாருக்கு வேளச்சேரியிலும் இதே போன்று வீட்டில் வைத்து விபச்சாரம் நடப்பதாக தகவல் வந்தது.

சூளைமேடு சோதனையை முடித்துக் கொண்ட சூட்டோடு வேளச்சேரிக்குப் பறந்தது போலீஸ் படை.

விபச்சாரம் நடப்பதாக தகவல் வந்ததை வைத்து குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தியதில், விபச்சாரம் செய்து வந்த திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். இவருக்கு திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகிறது. குடும்ப வறுமைக்காக அவர் விபச்சாரத்தில் தள்ளப்பட்டுள்ளார்.

திவ்யாவை தி.நகரைச் சேர்ந்த கலா என்பவர் தான் விபச்சாரம் செய்ய தூண்டியுள்ளார். இது தொடர்பாக திவ்யா, கலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+