இலங்கையில் தமிழர் பகுதிகளில் மனித உரிமை மீறல்: அமெரிக்கா கவலை
வாஷிங்டன்:
இலங்கையில் மனித உரிமைகள் மிகக் கடுமையாக மீறப்பட்டு வருவது பெரும் கவலை தருவதாக அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளியுரழு அமைச்சர் ரோகித பொகோல்லகாமா அமெரிக்கா வந்துள்ளார். பர்ன்ஸை அவர் சந்தித்துப் ேபசினார். முக்கால் மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவது குறித்து ரோகிதவிடம் பர்ன்ஸ் கவலை தெரிவித்தார்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் அப்பாவிகளை (தமிழர்களை) கடத்தும் செயல் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ரோகித, பர்ன்ஸிடம் விளக்கினார். அதை பர்ன்ஸ் வரவேற்றார்.
இருப்பினும் யாழ்ப்பாணம் மற்றும் தமிழர் பகுதிகளில் தொடர்ந்த மிகக் கடுமையான அளவில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருவது குறித்து இலங்கை அமைச்சரிடம் அமெரிக்க அமைச்சர் கவலை தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் முழுமையாக தடுக்கப்பட்டிருப்பதற்கும் அவர் கவலை தெரிவித்தார்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களைத் தண்டிக்க இலங்கை அரசு முழுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கை அமைச்சரை அவர் வலியுறுத்தினார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் குறிப்பாக தமிழர் வாழும் பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். இதற்கு இலங்கை ராணுவமும், கருணா குழுவினருமே காரணம் என பரவலாக கூறப்படுகிறது.
குறிப்பாக பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இதை இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மனித உரிமை அமைப்புகள் தேவையில்லாமல் இதை ஊதிப் பெரிதாக்குவதாக அவை கூறி வருகின்றன.
ஆனால் தமிழர்கள் தொடர்ந்து கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்தவண்ணம் உள்ளன. மேலும் யாழ்ப்பாணத்தில் அறிவிக்கப்படாத பொருளாதார தடையும் தொடர்ந்து நீடித்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications