பாட்ஷா உள்ளிட்ட 70 பேருக்கான தண்டனை 24ம் தேதி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா உள்ளிட்ட 70 பேருக்கான தண்டனை விவரம் வருகிற 24ம் தேதி அறிவிக்கப்படும் என தனி நீதிமன்ற நீதிபதி உத்திராபதி தெரிவித்துள்ளார்.
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 158 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
சாதாரண குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட 83 பேருக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முக்கியக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட அல் உம்மா தலைவர் பாட்ஷா, பொதுச் செயலாளர் அன்சாரி உள்ளிட்ட 70 பேருக்கு வருகிற 24ம் தேதி முதல் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என இன்று தனி நீதிமன்ற நீதிபதி உத்திராபதி அறிவித்தார்.
பாட்ஷா உள்ளிட்ட 24 பேர் இன்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications