நேருக்கு நேர் மோதவிருந்த சென்னை, டெல்லி விமானங்கள்
டெல்லி:
சென்னையிலிருந்து டெல்லி சென்ற இந்தியன் விமானமும், டெல்லியிலிருந்து கிளம்பிய ஜெட் ஏர்வேஸ் விமானமும் நேருக்கு நேர் மோதும் பயங்கர விபத்திலிருந்து தப்
பியுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னையிலிருந்து இன்று காலை டெல்லி சென்ற இந்தியன் விமானம் காலை 10.30 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்தது.
அந்த விமானம் தரையிறங்க இருந்த அதே ரன்வேயில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் புறப்பட தயாராகி ரன் வேயில் ஓடிக் கொண்டிருந்தது.
இதனால் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் அபாயம் எழுந்தது.
ஆனால் சட்டென சுதாரித்த சென்னை விமானத்தின் விமானி, தரையிறங்கிக் கொண்டிருந்த விமானத்தை திசை திருப்பி மீண்டும் பறக்க ஆரம்பித்தார். இதனால் இரு விமானங்களும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
ஜெட் ஏர்வேஸ் விமானம், விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு முறைப்படி தகவல் தெரிவிக்காமல் கிளம்ப முயன்றது பின்னர் தெரிய வந்தது.
சென்னை விமானத்தில் பிருந்தா காரத் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர்.
முதலில் இந்த நிகழ்வை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் மறுத்தனர். ஆனால் பிறகு நடந்ததை ஒப்புக் கொண்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications