'இன்டர்நெட்' மூலம் ஆள் பிடிக்கும் நக்சலைட்டுகள்!
டெல்லி:
இணையதளங்கள், பிளாக்குகளைப் பயன்படுத்தி தங்களது அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, தங்களது செய்திகளைப் பரப்புவது, புலனாய்வுப் பிரிவை அமைப்பது, சாப்ட்வேர் என்ஜீனியர்களின் உதவிகளைப் பெறுவது உள்ளிட்ட செயல்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இறங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக 9 பிளாக்குகளை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பிளாக்குகளுக்கு அடிக்கடி ஏராளமான இளைஞர்கள் வந்து போயுள்ளதும் தெரிய வந்துள்ளது. தற்போது நக்சல் ரெவல்யூஷன், பீப்பிள்ஸ் வாட்ச், ரெட் டயரி உள்ளிட்ட பல இணையதளங்கள், பிளாக்குகளை உள்துறை அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்த இணையதளங்கள், பிளாக்குகளைப் பயன்படுத்தி, படித்த இளைஞர்களை தங்கள் பக்கம் இழுத்து புதிய புலனாய்வுப் படையை உருவாக்க நக்சலைட்டுகள் தீர்மானித்துள்ளனர்.
ஆந்திராவிலும், சட்டீஸ்கரிலும் இந்த புலனாய்வுப் படையை நிர்மாணிக்க நக்சலைட்டுகள் திட்டமிட்டுள்ளனர். தங்களது பிளாக்குகளுக்கு அடிக்கடி வரும் படித்த இளைஞர்கள், சாப்ட்வேர் என்ஜீனியர்களுக்கு மெயில்கள் அனுப்பி அவர்களின் மன ஓட்டத்தை அறிகின்றனர். தங்களது அமைப்பின் பால் நேசத்தோடு இருப்பதாக தெரிய வந்தால் அவர்களை தங்களது அமைப்பில் இணைத்துக் ெகாள்கின்றனர்.
இணையதளம் மூலம் இப்படி பிரசாரமும், ஆளெடுப்பும் நடந்து வருவது குறித்து உள்துறை அமைச்சகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளுக்கு உதவி செய்வோர் யார் என்பதைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறுகிறது.
மேலும் இணையதளம் மூலம் தங்களுக்குத் தேவையான நிதியையும் மாவோ தீவிரவாதிகள் சேகரித்து வருகின்றனர். இதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications