நெல்லை: கேலி செய்த வாலிபரை கத்தியால் குத்திய கூர்க்காக்கள்
திருநெல்வேலி:
பாளையங்கோட்டையில் ஒயின் ஷாப்பில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அடித்து உதைக்க கூர்க்காக்கள் அவரது மண்டையை உடைத்தனர்.
பாளை மார்கெட்டில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு எதிரே ஒரு மதுக்கடை உள்ளது. நேற்று இரவு அங்கு நான்கு வழிச் சாலையில் பணிபுரியும் கூர்க்காக்கள் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். பெரியபாளையம் தெருவைச் சேர்ந்த கொத்தனார் முத்துகிருஷ்ணன் என்பவரும் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.
இந் நிலையில் முத்துகிருஷ்ணனும் அவரது நண்பர்களும் கூர்க்காக்களை கேலி செய்துள்ளனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர்.
சிறிது நேரம் கழித்து முத்துகிருஷ்ணன் தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சுமார் 10 கூர்க்காக்கள் வழிமறித்து தாக்கினர்.
தலையில் கத்தியால் குத்தியதாகவும் தெரிகிறது. இதில் முத்துகிருஷ்ணன் நடுரோட்டில் மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாளை போலீசார் விரைந்து வந்தனர். போலீசை கண்டதும் கூர்க்காக்கள் ஓட்டம் பிடித்தனர். அதில் பிரதீப்குமார், ரமேஷ், பிரகாஷ், ஜெயபால்சிங் ஆகிய 4 பேரை மட்டும் போலீசாரிடம் பிடிபட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications