சிபிசிஐடி போலீசார் தொடர்ந்த வழக்கில் திமுக எம்எல்ஏ விடுதலை !
பெரம்பலூர்
ஜெயங்கொண்டத்தில் நகைக்கடை தாக்கப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ சிவசங்கர் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2003ம் ஆண்டில் ஜெயங்கொண்டத்தில் திமுக நகர தேர்தல் நடைபெற்றபோது பிரபல பேச்சாளர் வெர்றிகொண்டானின் மகன் கருணாநிதிக்கும், குமார் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் தாக்கிக் கொண்டனர். இந்த சண்டையில் ஜெயங்கொண்டம் கடைவீதியில் உள்ள கணபதி சுந்தரம் நகைக்கடை தாக்கப்பட்டது.
அதில் இருந்த 3,000 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து நகைக்கடை அதிபரின் மகன் ராமசந்தின் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டது.
அதில் திமுக எம்எல்ஏ சிவசங்கர், ஜெயங்கொண்டம் ஒன்றிய திமுக செயலாலர் தனசேகர் உட்பட 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் அரசு சாட்சியாக பலர் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என கோரஸாக கூறிவிட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த அரியலூர் விரைவு நீதிமன்ற நீதிபதி பரஞ்சோதி போலீசார் குற்றத்தை சரிவர நிருபிக்காததால் திமுகவினரை விடுதலை செய்தார்.
சிபிசிஐடி இவ்வழக்கை சரியாக கையாளதாதால் தான் தோற்றுப் போனதாக பேசப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications