லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
திருவள்ளூர்:
கூடுதல் பளு ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி ரூ. 50,000 லஞ்சம் கேட்டு மிரட்டிய இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, மதுரவாயல் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சீதாராமன். இவர் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஒரு லாரி, கூடுதல் சுமையை ஏற்றிக் கொண்டு வந்தது. இதையடுத்து லாரியை தடுத்து நிறுத்திய சீதாராமன், அதன் டிரைவரிடம் ரூ. 50,000 லஞ்சம் கேட்டார். பணம் கொடுத்தால் வழக்கு போடாமல் விட்டு விடுவதாக கூறினார்.
இதையடுத்து லாரி டிரைவர் தனது உரிமையாளரை தொடர்பு கொண்டு இன்ஸ்பெக்டர் பணம் கேட்பதாக தெரிவித்தார்.
லாரி உரிமையாளர் உடனடியாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவலைத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை உதவி ஆணையர் நடராஜன் போலீஸ் படையுடன் விரைந்தார்.
லாரி உரிமையாளரிடம் பணத்தைக் கொடுத்து இன்ஸ்பெக்டரிடம் நடராஜன் அனுப்பி வைத்தார். அவரும் பணத்தை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தார். இதையடுத்து மறைந்திருந்த போலீஸார், சீதாரமானைக் கைது செய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications